இந்திய அணியில் அஸ்வினை சேர்த்துக்கோங்க இல்லன இவ்வளவு பாதிப்பு இருக்கு - முன்னாள் கேப்டன்
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின் பொழுது ரவிச்சந்திரன் குறித்து பேசியுள்ளார்.
அதில்,இந்திய அணி ஒரு மிக சிறந்த அணியாக வலம் வந்து கொண்டிருப்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது, இந்திய அணி ஏற்கனவே ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரிலும் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் தனது திறமையை காட்டி விட்டது
இந்திய மைதானங்களில் ராஜாவாக திகழ்ந்து வரும் இந்திய அணி தற்பொழுது வெளிநாடு மைதானங்களிலும் சென்று அந்த நாட்டு அணியை தோற்கடித்து கூடிய வல்லமையையும் பெற்று விட்டது.
அதற்காக இந்திய அணி தனது அணியை மேம்படுத்த தேவையில்லை என்று கூறிவிட முடியாது, இனிவரும் போட்டிகளில் இந்திய அணி அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினை ஆடும் லெவனில் சேர்த்து விளையாட வேண்டும்.
அஸ்வின் ஒரு அனுபவம் வாய்ந்த சிறந்த பந்துவீச்சாளர். எப்பேர்ப்பட்ட சூழ்நிலைகளிலும் எப்பேர்ப்பட்ட கண்டிசங்களிலும் மிக சிறப்பாக செயல்படக் கூடியவர் அப்படிப்பட்ட ஒரு வீரரை இந்திய அணி ஆடும் லெவனில் சேர்க்கவில்லை என்றால் அது இந்திய அணிக்கு தான் மிகப்பெரிய இழப்பாகும்.
ஒரு அணியின் சிறந்த தேர்வு எப்படி இருக்கவேண்டும் என்றால் அந்த அணி எப்பேர்ப்பட்ட சூழ்நிலைகளிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு போட்டிகளை வெற்றி பெறவேண்டும் அப்பொழுதுதான் அது சிறந்த அணியாக கருதப்படும்.
அதனை கருத்தில் கொண்டு எதிர்வரும் போட்டிகளில் இந்திய அணி அஸ்வினுக்கு முன்னுரிமை கொடுத்து தேர்ந்தெடுக்க வேண்டும், அப்படி செய்தால் மட்டுமே விராட்கோலி தலைமையிலான இந்திய அணி இன்னும் அதிகமான வெற்றிகளை பெறும் என்று தெரிவித்தார்.