என் இதயத்தைச் சுக்கு நூறாக உடைத்த இரண்டு போட்டிகள் இவைதான் - விராட் கோலி வருத்தம்

viratkohli heartbrakingmatch
By Irumporai Apr 05, 2022 09:05 AM GMT
Report

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியை தனது விளையாட்டுத்துறையில் நடந்த சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

முன்னாள் கேப்டன் விராட் கோலி தனது விளையாட்டுத்துறையில் நடந்த இரண்டு போட்டிகளை சுட்டிக்காட்டி அந்த இரண்டு போட்டிகளின் முடிவு தன்னை வருத்தமடையச் செய்ததாகவும்அந்த இரண்டு போட்டிகள் தனது இதயத்தை சுக்குநூறாக உடைத்தது என்றும் கூறியுள்ளார்.

அதன்படி விராட்கோலி ,2016 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியை அந்த இரண்டு போட்டிகளில் ஒரு போட்டியாக விராட் கோலி குறிப்பிட்டுள்ளார்.

அந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் 16 போட்டிகளில் விளையாடி 4 சதங்கள் மற்றும் 7 அரை சதங்கள் உட்பட 973 ரன்கள் விராட் கோலி குவித்தார். தற்பொழுது வரை ஒரு ஐபிஎல் தொடரில் ஒரு வீரர் அடித்த அதிகபட்ச ரன்கள் இது என கூறப்பட்டது.

இறுதிப் போட்டியில் பெங்களூர் அணி கட்டாயமாக வெற்றி பெற்றுவிடும் என்று அனைவரும் நினைத்த வேளையில், 8 ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அந்த ஆண்டு ஐபிஎல் தொடரை கைப்பற்றியது.

அதே ஆண்டு நடந்த ஐசிசி உலக கோப்பை டி20 தொடரின் அரையிறுதி ஆட்டத்தை குறிப்பிட்டு பேசிஅய் அந்த உலக கோப்பை டி20 தொடரில் 5 போட்டிகளில் விளையாடிய விராட் கோலி 3 அரை சதங்களுடன் மொத்தமாக 273 ரன்கள் குவித்தார்.

என் இதயத்தைச் சுக்கு நூறாக உடைத்த இரண்டு போட்டிகள் இவைதான் - விராட் கோலி வருத்தம் | Virat Kohli Heart Braking Two Matches

அந்த உலக கோப்பை தொடரில் தமிம் இக்பாலுக்கு அடுத்தபடியாக அதிக ரன்கள் குவித்த இரண்டாவது வீரராக விராட் கோலி இருந்தார்.

ஆனால் அரையிறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை துரதிஷ்டவசமாக இழந்தது.

இந்த இரண்டு தொடரில் விராட் கோலி குறிப்பிட்டுக் கூறிய இந்த இரண்டு போட்டிகளும் மிகுந்த மன வலியை கொடுத்தாக விராட் கோலி கூறியுள்ளார்.