பாகிஸ்தான் அணியை குறைத்து மதிப்பிட வேண்டாம் - அட்வைஸ் கொடுத்த ஹர்பஜன் சிங்

Virat Kohli Harbhajan Singh T20 Pak Vs Ind
By Thahir Oct 24, 2021 01:42 PM GMT
Report

பாகிஸ்தான் அணியை கணிக்க முடியவில்லை இருந்தாலும் அவர்களை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே இன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாட உள்ளன.

இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பல்வேறு கருத்துக்களை முன் வைத்துள்ளார்.

முக்கியமாக பாகிஸ்தான் அணியை குறைத்து மதிப்பிடாமல் இருப்பது நல்லது என்று அவர் கூறியுள்ளார். 'பாகிஸ்தான் அணி கணிக்க முடியாத ஒரு அணியாகவே இருந்து வருகிறது.

அதனால் எந்த அணியையும் வெல்ல முடியும். வித்தியாசமாக விளையாடும் இரண்டு அணிகளை நான் ஒப்பிட விரும்பவில்லை.

அதேபோல், கடந்த கால சாதனைகள் மீது அதிக கவனம் செலுத்தக் கூடாது எனவும் நினைக்கிறேன். ஏனெனில், இரு அணிகளும் அதிகப்படியான போட்டிகளில் நேருக்கு நேர் விளையாடவில்லை.

அப்படி அதிக போட்டிகளில் இரு அணிகளும் விளையாடி அதில் ஒரு அணி அதிக வெற்றிகளை பெற்றிருந்தால் தான் புள்ளி விவரங்கள் குறித்து பேச முடியும்.

நம்முடைய அணி இப்போது பேப்பரில் தான் இருக்கிறது. பாகிஸ்தான் அணியை நம்மால் எளிதில் வீழ்த்த முடியும். அவை எல்லாம் களத்தின் செயல்பாடுகளைப் பொறுத்துதான்' என்று ஹர்பஜன் தெரிவித்துள்ளார்.