தேசியகீதம் போடுறப்போ ஏன் இப்படியெல்லாம் பண்றீங்க? வீராட் கோலியை விளாசும் ரசிகர்கள்

national anthem Virat Kohli gum while playing
By Nandhini Jan 24, 2022 05:08 AM GMT
Report

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியின்போது தேசிய கீதம் இசைத்தது. அப்போது விராட் கோலி செய்த காரியம் பெரும் விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறது.

போட்டி தொடங்குவதற்கு முன்பு வழக்கம்போல் தேசிய கீதம் இசைக்கப்படும். அப்போது, இரு நாட்டின் தேசிய கீதங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஒலிக்கப்படுவது வழக்கம்.

அப்போது, அந்தந்த நாட்டு வீரர்கள் தங்கள் மனதிற்குள் தேசிய கீதத்தை மெளனமாக பாடுவார்கள். அந்த நேரத்தில் நாட்டிற்கு மரியாதை செய்யும் விதமாக அமைதியாக நேர்ப்பார்வையுடன் நின்றிருப்பார்கள்.

தேசிய கீதம் இசைக்கும்போது பார்வையை வேறு எங்கிலும் சிதற விடமாட்டார்கள். இந்நிலையில், நேற்று இந்திய தேசிய கீதம் ஒலித்தபோது, விராட் கோலி சுயிங்கம் மென்று கொண்டு வாயை நன்றாக அசைத்துக் கொண்டிருந்தார்.

தற்போது இந்த வீடியோ டுவிட்டரில் பரவ விட்ட ரசிகர்கள் விராட் கோலியை கடும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.