பெங்களூரு அணியின் புதிய கேப்டன் - வீடியோ பதிவு மூலம் பதிலளித்த விராட் கோலி, ரசிகர்கள் உற்சாகம்

iplt20 rcbcaptain2022 kohliholdssuspense
By Swetha Subash Mar 10, 2022 02:18 PM GMT
Report

ஐபிஎல் 2022-ம் ஆண்டு போட்டிக்கள் வரும் மார்ச் நான்காம் வாரத்தில் தொடங்க உள்ளது.

மார்ச் 26-ம் தேதி தொடங்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோத உள்ளன.

15-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 26-ம் தேதி மும்பையில் தொடங்குகிறது.மார்ச் 26-ம் தேதி தொடங்கி மே 29 ஆம் தேதி முடிவடைகிறது.

பெங்களூரு அணியின் புதிய கேப்டன் - வீடியோ பதிவு மூலம் பதிலளித்த விராட் கோலி, ரசிகர்கள் உற்சாகம் | Virat Kohli Gives A Major Update On Rcb Captain

இதனிடையே பெங்களூரு அணியின் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகிய நிலையில் புதிய கேப்டன் யார், என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பெங்களூரு அணியின் புதிய கேப்டன் யார் என்பதை அணி நிர்வாகம் மார்ச் 12-ம் தேதி அறிவிக்கிறது. 

இந்நிலையில் பெங்களூரு அணியின் புதிய கேப்டன் குறித்த அப்டேட்டை புதிய வீடியோ மூலம் வெளியிடப்பட்டுள்ளது அணி நிர்வாகம்.

அந்த வீடியோவில் விராட் கோலி தோன்றி, “உங்களுக்காக சில அப்டேட்களை வழங்கவுள்ளேன். மிகச்சிறந்த ஐபிஎல் சீசனை எதிர்நோக்கியுள்ளேன்.

புத்துணர்ச்சி பெற்ற் அணியுடன் விளையாட ஆவலோடு இருக்கிறேன்.. அதற்கு காரணம் என்னவென்றால், என கூறுவதற்குள், வீடியோ நின்றுவிடுகிறது.

மார்ச் 12-ம் தேதி இது குறித்த முழுமையான அப்டேட்டுடன் கூடிய வீடியோ வெளியாகும் எனத் தெரிவித்துள்ளது.