பொய் புகார் கொடுத்த வங்கதேசம்... - தன் பேட்டை பரிசாக கொடுத்த விராட் கோலி... - நெகிழ்ச்சி சம்பவம்
வங்கதேச கிரிக்கெட் வீரரருக்கு, தன் பேட்டை விராட் கோலி பரிசாக கொடுத்துள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த 16-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கிறது.
Fake Fielding சர்ச்சை
சமீபத்தில் நடைபெற்ற T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், வங்கதேச அணிக்கு எதிராக விராட் கோலி Fake Fielding செய்ததாக சர்ச்சை எழுந்தது.
அப்போட்டியில், அர்ஷ்தீப் வீசிய 7வது ஓவரின்போது பந்தை பிடிக்காமல், ஸ்டம்பை நோக்கி எறிவது போல விராட் கோலி Fake Fielding செய்ததாக புகார் கொடுக்கப்பட்டது.
மேலும், வங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம், இந்தியாவுக்கு எதிரான போட்டியின் போது நடுவர் தொடர்பான பிரச்சினைகளை எழுப்ப உள்ளதாக தகவல்கள் தெரிவித்தது.
போலி பீல்டிங்கிற்காக விராட் கோலிக்கு எதிராக நடுவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை மற்றும் ஈரமான அவுட்ஃபீல்ட் காரணமாக மறுதொடக்கத்தை தாமதப்படுத்த ஷாகிப் அல் ஹசனின் கோரிக்கையை புறக்கணித்ததால் பிசிபி அதிருப்தி அடைந்தது.
பொய் புகார்
களத்தில் இருந்த பேட்ஸ்மேன்கள் புகார் அளிக்காத நிலையில், நடுவர்கள் மீது பொய்யான காரணம் கூறியதால், நுருல் ஹசன் மீது நடவடிக்கை எடுக்க ஐசிசி திட்டமிட்டிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
தன் பேட்டை பரிசளித்த விராட் கோலி
வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் தொடக்க வீரர் லிட்டன் தாஸ் அதிரடியாக விளையாடினார்.
லிட்டன் தாஸ் களத்தில் வெற்றிக்காக நின்று கடுமையாக விளையாடினார். ஆனால், இந்தியாவின் வெற்றி வாய்ப்பால் அவரின் கனவு கானல் நீர் போல் கரைந்தது. வங்கதேசம் ஆட்டமிழந்தாலும், அவர் ஆட்டமிழக்காமல் ஆடியது ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.
இந்திய பந்து வீச்சாளர்களை மிரள வைத்த லிட்டோன் தாஸ்க்கு இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேனான விராட் கோலி பேட்டை ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார்.
தன் மீது பொய் புகார் கூறிய வங்க தேச அணி வீரருக்கு விராட் கோலி பரிசு கொடுத்துள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.