“ரோகித் ஷர்மாவை கொறச்சு எடைப்போடாத பொல்லார்ட், வேற மாதிரி முயற்சி செய்” - மைதானத்தில் கோலி பேசிய ஆடியோ வைரல்

indiavswestindiest20 pollardkohlirohitsharma viralvideoofkohlipollard
By Swetha Subash Feb 19, 2022 07:46 AM GMT
Report

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மாவுக்காக விராட் கோலி குரல் கொடுத்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் கோலியின் ஸ்டம்ப்-மைக் ஆடியோக்கள் வெளியாகி வைரலானதை போல வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கோலி ஆடிய நடனம் வெளியானது.

இந்நிலையில் 2-வது டி20 போட்டியிலும் அது போன்ற ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.

“ரோகித் ஷர்மாவை கொறச்சு எடைப்போடாத பொல்லார்ட், வேற மாதிரி முயற்சி செய்” - மைதானத்தில் கோலி பேசிய ஆடியோ வைரல் | Virat Kohli Funny Comments On Field With Pollard

ஆட்டத்தின் 8-வது ஓவரின் 3-வது பந்தை விராட் கோலி வேகமாக அடிக்க அந்த பந்து, நான்ஸ்ட்ரைக்கர் எண்ட் திசைக்கு நேராக சென்றதால் பவுலர் ராஸ்டன் சேஸ் தடுத்து நிறுத்தினார்.

ஆனால் அதற்குள்ளாக நான் ஸ்ட்ரைக்கர் எண்டில் இருந்து ரோகித் சர்மா க்ரீஸை விட்டு வெளியே வந்துவிட்டார்.

அப்போது களத்தில் இருந்த கெயீரன் பொல்லார்ட் உடனே பந்தை எடுத்து ரோகித்தை ரன் அவுட்டாக்கு எனக்கூற, ராஸ்டன் சேஸ் முயற்சி செய்து தோல்வியடைந்தார்.

“ரோகித் ஷர்மாவை கொறச்சு எடைப்போடாத பொல்லார்ட், வேற மாதிரி முயற்சி செய்” - மைதானத்தில் கோலி பேசிய ஆடியோ வைரல் | Virat Kohli Funny Comments On Field With Pollard

இந்த நிகழ்வின் போது பேசிய விராட் கோலி, " ரோகித்தை இந்த மாதிரியெல்லாம் சாதாரணமாக ரன் அவுட் ஆக்கிவிட முடியாது போலி ( பொல்லார்ட்).

அவருக்கு வேறு மாதிரி முயற்சி செய்” என நகைச்சுவையுடன் கூறினார். தற்போது இந்த ஆடியோ பதிவு தான் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.