ஓவராக கூச்சல் போட்ட கோலி;அபராதம் போட்ட நடுவர் - இதுக்கு இவ்வளவா?
அதிக சத்தம் போட்டு கத்தியதாக விராட் கோலிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
CSK vs RCB
ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை தோற்கடித்தது. அதில், விராட் கோலி சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து பெவிலியன் திரும்பினார்.
அப்போது டிரெஸ்ஸிங் ரூமில் அமர்ந்திருந்த விராட் கோலி மேக்ஸ்வெல் சிக்சர் அடித்த போதெல்லாம் கத்தி கூச்சலிட்டார். சிஎஸ்கே வீரர் ருதுராஜ் ஆட்டம் இழந்த போதும்,சிவம் துபே கேட்ச் ஆனபோதும் கத்தினார்.
அபராதம்
விராட் கோலியின் இந்த நடவடிக்கைகள் ஐபிஎல் விதிமீறல்களுக்கு எதிரானது என்பதால் அவருக்கு போட்டியின் ஊதியத்திலிருந்து 10% அபராதம் விதித்து நடுவர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதுகுறித்து பிசிசிஐ, "ஐபிஎல் 2023 தொடரின் 24வது போட்டி. CSK மற்றும் RCB அணிகளுகிடையேயானப் போட்டியின்போது
RCB அணியின் பேட்ஸ்மேன் விராட் கோலி, ஐபிஎல்லின் விதிமுறைகளில் ஒன்றான ஆர்டிக்கள் 2.2 விதிமுறையை மீறியிருக்கிறார். இதன் காரணமாக விராட் கோலிக்கு அவரின் போட்டிக்கான ஊதியத்திலிருந்து 10% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளது.