சின்ன பையன் கிட்டயாடா வீரத்த காட்டுற..?வாக்குவாதம் செய்த விராட் கோலி !!

Viral Fight Virat Kohli India Vs SA
By Thahir Jan 14, 2022 11:30 PM GMT
Report

இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கும் நிலையில்,

இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தென் ஆப்ரிக்காவின் கேப்டவுன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.  

இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 223 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 79 ரன்களும், புஜாரா 43 ரன்களும் எடுத்தனர்.

இதனையடுத்து முதல் இன்னிங்ஸை துவங்கிய தென் ஆப்ரிக்கா அணிக்கு அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான கீகன் பீட்டர்சன் 72 ரன்கள் எடுத்து கொடுத்தாலும், மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதால் தென் ஆப்ரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 210 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்திய அணியில் அதிகபட்சமாக பும்ராஹ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். உமேஷ் யாதவ் மற்றும் முகமது ஷமி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதன்பின் 13 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணிக்கு ரிஷப் பண்ட் 100* ரன்கள் எடுத்து கொடுத்தாலும், சீனியர் பேட்ஸ்மேன்கள் ஒருவர் கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ரன் குவிக்காததால் வெறும் 198 ரன்களுக்கே இந்திய அணி ஆல் அவுட்டானது.

இதன் மூலம் 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணிக்கு வழக்கம் போல் அந்த அணியின் கீகன் பீட்டர்சன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 82 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் இலக்கை ஈசியாக எட்டிய தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, மூன்று போட்டிகள் கொண்ட தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.