தொடர்ந்து சொதப்பும் விராட் கோலி... கடுப்பான ரசிகர்கள்
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி டக் அவுட்டாகியதால் ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 183 ரன்களில் ஆல் அவுட்டானது. இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 21ரன்கள் எடுத்தது.
After going wicketless against Virat Kohli on the entire 2018 tour, James Anderson has added to his collection. #ENGvIND pic.twitter.com/pBC9lrnUjf
— The CricViz Analyst (@cricvizanalyst) August 5, 2021
இதனிடையே இன்று 2 ஆம் நாள் ஆட்டம் நடைபெற்றது. அப்போது 3 விக்கெட்டுக்கு களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தான் சந்தித்த முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட்டை பறிகொடுத்தார். ஜேம்ஸ் ஆண்டர்சனின் வீசிய பந்தில் அவர் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இந்தநிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இங்கிலாந்து அணிக்கு எதிராக தொடர்ந்து சொதப்பி வருவது ரசிகர்களை அதிருப்தியடைய செய்துள்ளது.
அவரின் சொதப்பல் ஆட்டம் குறித்து முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் சமூக வலைதள பக்கங்கள் மூலம் தங்களது கருத்துகளை வேதனையுடன் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan
