The KING is back - வைரலாகும் விராட் கோலியின் வலி நிறைந்த கண்ணீர்... - Emotional video...!

Virat Kohli Cricket Viral Video T20 World Cup 2022
By Nandhini Oct 25, 2022 10:48 AM GMT
Report

விராட் கோலியின் Emotional video தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 

விராட் கோலி

இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலி கிரிக்கெட்டில் பல சாதனைகளை செய்தவர். ஆனால், சமீப கடந்த ஆண்டுகளாக அவர் தனது விளையாட்டில் தொடர்ந்து சொதப்பி வந்தார். சர்வதேச கிரிக்கெட் தொடங்கி, உள்ளூர் கிரிக்கெட் வரையில் ரன் குவிப்பதில் வல்லவரான விராட் கோலி, அவரின் போதாத நேரம் என்பது போல ஐபிஎல் சீசன் தொடரில் சொதப்பினார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் அனைத்து சீசன்களையும் சேர்த்து 6499 ரன்களை பதிவு செய்துள்ள அவர், நடப்பு சீசனில் மொத்தம் 12 போட்டிகளில் விளையாடி 216 ரன்கள் மட்டுமே எடுத்தார். 6 முறை ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி உள்ள கோலி, ஒரே ஒரு அரை சதம் மட்டுமே அடித்தார். 3 போட்டிகளில் அவர் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார்.

தொடர்ந்து விராட் கோலி சொதப்பி வந்ததால், அவரை நேர்முகமாகவும், மறைமுகமாகவும் பலர் குற்றம் சாடினார்கள். இதனால் அவர் மனதளவில் மிகவும் சோர்வடைந்தார். ஆனாலும் விராட் கோலிக்கு, அவரது ரசிகர்களும், அணி நிர்வாகம் ஆதரவு கொடுத்தே வந்தது.

பழைய பார்முக்கு திரும்பிய விராட் கோலி

சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் மீண்டும் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதியன. இப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் அரைசதம் அடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் விராட் கோலி.

பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா

கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்திய அணி பாகிஸ்தானுடன் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. மெல்போர்னில் நடைபெற்ற இப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி அடைந்தது. ஆட்டமிழக்காமல் விராட் கோலி நின்று விளையாடி 82 ரன்களை குவித்தார். இது இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. இப்போட்டியில் ஆட்ட நாயகனாக விருதை கைப்பற்றினார் விராட் கோலி. தற்போது சமூகவலைத்தளங்களில் இந்திய அணி வீரர்களை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

virat-kohli-emotional-viral-video

வைரலாகும் விராட் கோலியின் Emotional Video

20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி அடைந்த போது, மைதானத்தில் விராட் கோலி, தரையில் தன் கையால் அடித்து, கண்ணீர்விட்டு அழுதார்.

அப்போது, சக வீரர்கள் ஓடி வந்து அவரை தூக்கியும், கட்டியணைத்தும் கொண்டாடினார்கள். தற்போது சமூகவலைத்தளங்களில் விராட் கோலியின் Emotional Video வைரலாகி வருகிறது.  இந்த வீடியோவைப் பார்த்த அவரது ரசிகர்களின் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.