இதெல்லாம் வேணாம்… வம்பிழுத்த ரசிகர்கள் : பதிலடி கொடுத்த விராட்

Virat Kohli Cricket
1 மாதம் முன்

 இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 4 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், ஐந்தாவது போட்டிக்காக இந்தியா இங்கிலாந்து சென்றுள்ளது.

இங்கிலாந்து சென்றுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்து அணியுடன் ஒரு டெஸ்ட் போட்டி (ஒத்திவைக்கப்பட்ட போட்டி), மூன்று டி.20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

இதெல்லாம் வேணாம்… வம்பிழுத்த  ரசிகர்கள் : பதிலடி கொடுத்த விராட் | Virat Kohli Dressing Room Kamlesh Nagarkoti

இதில் முதலில் நடைபெறும் டெஸ்ட் போட்டி ஜூலை 1ம் தேதி துவங்க உள்ள நிலையில், இதற்கான பயிற்சி போட்டிகளில் இந்திய வீரர்கள் விளையாடி வருகின்றனர். 

பயிற்சி போட்டியின் போது இந்திய அணியின் இளம் வீரரான கம்லேஷ் நாகர்கோட்டி பவுண்டரி லைனில் பீல்டிங் செய்து கொண்டிருந்த போது, மைதானத்தில் இருந்த ரசிகர்கள் சிலர் அவரை கிண்டலடித்தனர், இதனை பார்த்து கடுப்பான முன்னாள் கேப்டனான விராட் கோலி, தனது பாணியில் அந்த ரசிகர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தார்.

இளம் வீரரை கிண்டலடித்த ரசிகர்களுக்கு விராட் கோலி பதிலடி கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.காயம் காரணமாக கே.எல் ராகுலும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ள நிலையில், தற்போது மற்றொரு துவக்க வீரரும் கேப்டனுமான ரோஹித் சர்மாவும் விலகும் நிலை ஏற்பட்டுள்ளது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.   

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.