“நாங்க கடைசி வரை போராடினோம்.. ஆனால்” - மனமுடைந்து பேசிய விராட் கோலி

virat kohli INDvsENG ENGvsIND
By Petchi Avudaiappan Aug 29, 2021 01:22 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

இங்கிலாந்துக்கு எதிரான லீட்ஸ் டெஸ்டில் இந்திய கிரிக்கெட் அணி அடைந்த படுதோல்வி பற்றி கேப்டன் விராட் கோலி மனமுடைந்து பேசியுள்ளார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி தொடங்கிய 3வது போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதனிடையே இந்திய அணியின் படுதோல்வி பற்றி கேப்டன் விராட் கோலி மனமுடைந்து பேசியுள்ளார். அதில் நாங்கள் முடிந்தவரை இந்த டெஸ்ட் போட்டியில் போராடினோம். இரண்டாவது இன்னிங்ஸில் மீண்டு வர எங்களுக்கு சில பார்ட்னர்ஷிப்கள் அமைந்தன. அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என தெரிவித்தார்.

இந்தப் போட்டியைப் பொறுத்தவரை முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில் சொதப்பினோம். இங்கிலாந்தில் இப்படியாக சில நேரங்களில் நடக்கும்.இது ஒரு நல்ல பிட்ச் என்பதால் நன்றாக பேட்டிங் செய்ய முடியும். ஆனால் நாங்கள் அதனை செய்ய தவறி விட்டோம்.

எங்கள் அணி கண்டிப்பாக மீண்டு வரும். எங்கள் திறனை நாங்கள் முதல் இரண்டு டெஸ்ட்களில் காட்டினோம். மீண்டும் அதைக் காட்டுவோம் என கேப்டன் விராட் கோலி நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.