விராட் கோலி நல்ல கேப்டன் இல்லை : முன்னாள் வீரர் அதிரடி பேச்சு
இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மான்டி பெனசர் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது விராட் கோலிகேப்டனாக இந்திய அணிக்கு எதுவும் செய்யவில்லை என கூறியுள்ளார்
. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இந்திய அணியும், ஆஃப்கானிஸ்தான் அணியும் மோதின.
நேற்று அபுதாபியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் முகமது நபி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு கே.எல் ராகுல் 69 ரன்களும், ரோஹித் சர்மா 74 ரன்களும் எடுத்து மிக சிறப்பான துவக்க கொடுத்தனர்.
20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்த ஆஃப்கானிஸ்தான் அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.
இந்நிலையில் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்த இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தனது முதல் வெற்றியை பெற்றது,
இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மான்டி பெனசர் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது விராட்கோலி குறித்து பேசியுள்ளார்.
அதில் ,விராட் கோலியை இந்த கிரிக்கெட் உலகம் ஒரு மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக பார்க்கிறது இவர் எப்பேர்பட்ட ரன்களாக இருந்தாலும் சேஸ் செய்வதில் அதிரடியாக செயல்படக்கூடிய பேட்ஸ்மேன் என்ற நல்ல பார்வையோடு விராட்கோலி பார்க்கிறது,
ஆனால் விராட் கோலியின் தலைமைத்துவத்தை கிரிக்கெட் வட்டாரங்கள் விமர்சித்து தான் வருகிறது என்றால் இவர் கேப்டனாக இந்திய அணிக்கு எதுவும் செய்யவில்லை என்பது நிதர்சனமான உண்மையாகும் என கூறியுள்ளார்.
மேலும் இந்திய அணி அடுத்தடுத்து வரவிருக்கும் நமீபியா மற்றும் ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக அதிரடியாக வெற்றிபெறவேண்டும் ,
மேலும் நியூசிலாந்து அணி தான் விளையாட வேண்டிய ஆப்கானிஸ்தான் மற்றும் நமீபியா போன்ற அணிகளுக்கு எதிராக ஏதேனும் ஒன்றில் தோல்வி அடைந்தால் இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறுவதில் சாத்தியமான ஒன்று என்றும் மாண்டி பனசார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது