விராட் கோலி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த பொறியாளர் கைது

Arrest Virat Kohli Engineer Sexual intimidation Daughtter
By Thahir Nov 10, 2021 05:50 PM GMT
Report

விராட் கோலியின் மகளுக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்தியா கிரிக்கெட் அணி நடப்பு டி20 உலக கோப்பையில் இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவி தொடரை விட்டு வெளியேறியது.

இந்நிலையில், பாகிஸ்தானுடனான முதல் போட்டியில் தோல்வியை தழுவியதற்குன் ரசிகர்கள் வீரர்களை வசைப்பாடினர்.

குறிப்பாக இந்திய கேப்டன் விராட் கோலியை ரசிகர்கள் வறுத்தெடுத்தனர். இதற்கிடையில் சமூகவலைதளங்களில் மர்ம நபர் ஒருவர் விராட்கோலியின் 9 மாதமே ஆன பெண் குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்திருந்தார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மகளிர் ஆணையம் காவல்நிலையத்தில் வழக்குபதிவு செய்தது.

இந்நிலையில், விராட்டின் மகளுக்கு மிரட்டல் விடுத்த நபரை காவல்துறை கைது செய்தனர். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதை சேர்ந்த ராம்நாகேஷ் ஸ்ரீனிவாஸ் அக்குபதினி என்பவர் தான் தனது ட்விட்டர் ஹேண்டிலை பாகிஸ்தான் நாட்டு ஆதரவாளரை போல மாற்றி கோலியின் மகளுக்கு மிரட்டல் விடுத்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்