‘விராட் கோலி பற்றி கவலைப்படாதீங்க... எனக்கு நம்பிக்கை இருக்கு...’ - ரிக்கி பாண்டிங் பேட்டி..!

Virat Kohli Cricket Ricky Ponting
By Nandhini Mar 07, 2023 08:48 AM GMT
Report

விராட் கோலி பற்றி கவலைப்படத் தேவையில்லை என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கிபாண்டிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Ind vs Aus  ஒருநாள் போட்டி -

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இப்போட்டியில் விராட் கோலி கலந்து கொண்டு விளையாடி வருகிறார்.

சதம் அடிக்காத விராட் கோலி

இந்நிலையில், இந்திய முன்னணி கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு தற்போது 34 வயதாகிறது. ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்து 3 ஆண்டுகளுக்கு மேலாகிறது.

தற்போது நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 3 டெஸ்டுகளில் 5 இன்னிங்சில் ஆடி வெறும் 111 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ர். ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லையே என்று ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள். நாளை மறுதினம் தொடங்கும் கடைசி டெஸ்டில் ரன்குவிக்க வேண்டிய நெருக்கடியில் விராட் கோலி தவித்து வருகிறார்.

virat-kohli-cricketers-ricky-ponting

ரிக்கி பாண்டிங் நம்பிக்கை

இந்த நிலையில் விராட் கோலி பற்றி கவலை வேண்டாம் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கிபாண்டிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

'விராட் கோலி குறித்து ஏற்கெனவே பலமுறை சொல்லிவிட்டேன். தற்சமயம் விராட் கோலி ரன் எடுக்காமல் இருக்கலாம். ஒரு பேட்ஸ்மேனாக ரன் எடுக்க தடுமாறும் போது, விராட் கோலியின் ஆட்டத்திறன் குறித்து எனக்கு கவலையில்லை.

ஏனெனில் அவர் மீண்டும் பார்முக்கு வந்து ரன்களை குவித்து விடுவார் என்ற நம்பிக்கை உள்ளது. முதல் இரு டெஸ்டுகளில் தோல்வி அடைந்த ஆஸ்திரேலியா 3-வது டெஸ்டில் வெற்றி பெற்றது பாராட்டுக்குரியது. இங்குள்ள ஆடுகளங்களில் பேட்டிங் செய்வது மிக, மிக கடினம். இதே மாதிரியான ஆடுகளத்தன்மை தொடர்ந்தால், உண்மையிலேயே பேட்டிங் செய்வது மிகவும் சிரமம் என்றார்.