ஐசிசி வெளியிட்ட ஒருநாள் போட்டி தரவரிசை - முன்னேறி வந்த விராட் கோலி...! குவியும் வாழ்த்துக்கள்...!

Virat Kohli Cricket Viral Video Indian Cricket Team
By Nandhini Jan 20, 2023 12:48 AM GMT
Report

நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி

இந்தியாவிற்கு வருகை தந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடி வருகிறது.

நேற்று இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஐதராபாத்தில் மைதானத்தில் இரு அணிகளுக்கு நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இப்போட்டியில் இறுதியில் இந்திய அணி 12 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது. இதனையடுத்து, இத்தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

virat-kohli-cricketer-india-icc

ஐசிசி வெளியிட்ட ஒருநாள் போட்டி தரவரிசை

தற்போது ஒருநாள் போட்டியில் தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் விராட் கோலி 4-வது இடத்துக்கு இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

சமீபத்தில் நடந்த இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் 2 சதம் உட்பட 283 ரன்கள் விராட் கோலி சாதனை படைத்தார். இதனால் அவர் 4வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.