நாய்குட்டியை தன் மடியில் வைத்து கொஞ்சி விளையாடிய விராட் கோலி - வைரலாகும் புகைப்படம்...!

Virat Kohli Viral Photos
By Nandhini Mar 06, 2023 06:42 AM GMT
Report

நாய்குட்டி ஒன்றை தன் மடியில் வைத்து கொஞ்சி விளையாடிய விராட் கோலி புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Ind vs Aus 3 ஒருநாள் போட்டி -

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இப்போட்டியில் விராட் கோலி கலந்து கொண்டு விளையாடி வருகிறார்.

விராட் கோலி மாபெரும் சாதனை

சமீபத்தில் விராட் கோலி, 164 நாட்களில் 1000 ரன்கள் குவித்து விராட் கோலி சாதனைப் படைத்தார்.

மேலும், விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் செப்டம்பர் 8ம் தேதி 24000 ரன்களை எடுத்தார். தற்போது, அவர் சர்வதேச கிரிக்கெட்டில் 25000 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த 5 மாதங்கள் மற்றும் 13 நாட்களில் 1000 ரன்கள் எடுத்து அசத்தி இருக்கிறார். இதனையடுத்து, 25,000 சர்வதேச ரன்களை எட்டிய 6து கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

virat-kohli-cricketer-india

வைரலாகும் புகைப்படம்

இந்நிலையில், விராட் கோலி தனது சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் செல்ல நாய் ஒன்றை தூக்கி வைத்து கொஞ்சி மகிழ்ந்து விளையாடுகிறார். இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் கமெண்ட் செய்து வருகின்றனர்.