பல வருடங்களுக்குப் பிறகு கார் ஓட்டுகிறேன்…விராட் கோலி நெகிழ்ச்சி பதிவு… - வைரலாகும் புகைப்படம்..!

Virat Kohli Viral Photos
By Nandhini Feb 15, 2023 06:28 AM GMT
Report

பல வருடங்களுக்குப் பிறகு கார் ஓட்டுகிறேன் என்று இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி சமூகவலைத்தளங்களில் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விராட் கோலி அதிரடி

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. சமீபத்தில் நாக்பூரில் நடந்த தொடக்க டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி தலைநகர் டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.

இந்த மைதானம் விராட் கோலியின் ரன் வேட்டைக்கு கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. விராட் கோலி முதல் இன்னிங்ஸில் 249 ரன்களும், 2வது இன்னிங்ஸில் 55 ரன்களும் எடுத்து சாதனை படைத்துள்ளார். இவரது இந்த அதிரடி ஆட்டம், எதிர்வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது டெஸ்டிலும் தொடர்ந்தால், நீண்ட நாள் டெஸ்ட் போட்டிக்கான சதம் ஏக்கம் தீரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

virat-kohli-cricketer-india

வைரலாகும் புகைப்படம்

தற்போது சமூகவலைத்தளங்களில் விராட் கோலி ஒரு புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், பல வருடங்களுக்குப் பிறகு டெல்லியில் உள்ள மைதானத்தை நோக்கி ஒரு நீண்ட பயணம். அத்தகைய ஒரு ஏக்கம் உணர்வு என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது, விராட் கோலியின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் கமெண்ட் செய்து வருகிறார்கள்.