வாய்ப்பில்லை ராசா..வாய்ப்பில்லை..இந்தியா அணி சாம்பியன் ஆகாது - மைக்கெல் வான் திட்டவட்டம்
டி.20 உலகக்கோப்பை தொடரை இங்கிலாந்து அணியே வெல்லும் என முன்னாள் வீரர் மைக்கெல் வான் தெரிவித்துள்ளார்.
டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 15ம் தேதி துவங்கியது. இதில் குரூப் ஸ்டேஜ் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் போன்ற முக்கிய அணிகளுக்கான போட்டிகள் அடுத்த இரு தினங்களில் துவங்க உள்ளது.
ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் இந்த முறை சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார் என ஆவலுடன் காதிருக்கும் நிலையில்,
முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் இந்த முறை எந்த எந்த அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறித்தும் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்பது குறித்தும் தங்களது கணிப்புகளை ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில், டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் இங்கிலாந்து வீரரான மைக்கெல் வான்,
இந்த முறை இங்கிலாந்து அணியே சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து மைக்கெல் வான் பேசுகையில்,
'என்னை பொறுத்தவரையில் இந்த முறை இங்கிலாந்து அணி தான் சாம்பியன் பட்டத்தை வெல்லும். இந்திய அணி கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுவது ஏன் என்பது எனக்கு தெரியவில்லை.
டி.20 போட்டிகளில் இந்திய அணி அவ்வளவு சிறப்பாக செயல்படுவது இல்லை. வெஸ்ட் இண்டீஸ் அணியும் பாகிஸ்தான் அணியும் தான் எதிரணிகளை அச்சுறுத்தக்கூடிய அணி.
நியூசிலாந்து அணியும் தொடர்ந்து மிக சிறப்பாக விளையாடி வருகிறது. நியூசிலாந்து அணியில் திறமை வாய்ந்த பல அனுபவ வீரர்கள் உள்ளனர்' என்று தெரிவித்தார்.