டி20 உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி பந்துவீச்சு

India Cricket Virat Kohli T20 World Cup
By Thahir Oct 18, 2021 01:50 PM GMT
Report

டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துடனான பயிற்சி ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி இன்று (திங்கள்கிழமை) இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

இங்கிலாந்து அணியில் ஜாஸ் பட்லர் கேப்டனாகப் பொறுப்பேற்றுள்ளார். டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இந்த உலகக் கோப்பையில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா, கேஎல் ராகுல் களமிறங்குவார்கள் எனவும், தான் 3-வது வீரராகவே களமிறங்கவுள்ளதாகவும் கோலி தெரிவித்தார்.