ஐபிஎல் போட்டியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகல் - ரசிகர்கள் கடும் அதிர்ச்சி
நடப்பு ஐபிஎல் சீசனுக்கு பின்னதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலக உள்ளதாக பெங்களூர் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் அவர் அடுத்தடுத்த சீசன்களில் வீரராக தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 'விராட் கோலி மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர். அவர் ஆர்சிபி அணியின் சொத்து.
அவரது தொழில்முறை ஆட்டத்தின் நேர்த்தியும், கேப்டன்சியும் மிகவும் அற்புதமானது. அவரது முடிவை நாங்கள் மதிப்பளிக்கிறோம். அதோடு அதனை ஆதரிக்கவும் செய்கிறோம்.
அவரது தலைமை பண்புகக்கு ஆர்சிபி தலை வணங்குகிறது. அடுத்த சீசன் முதல் அவர் அணியின் சீனியர் வீரராக தொடருவார்' என பெங்களூர் அணியின் தலைவர் பிரத்மேஸ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
'ஆகச்சிறந்த திறன் படைத்த ஆர்சிபி அணியை வழி நடத்திய பயணம் மிகவும் அற்புதமானது. அணியின் வளர்ச்சிக்காக பாடுபட்ட அனைவருக்கும் எனது நன்றிகள்.
இந்த முடிவை சுலபமாக எடுக்கப்பட்டது இல்லை. எனது நெஞ்சுக்கு மிகவும் பெங்களூர் அணி நெருக்கமானது. நான் இதற்கு முன்னதாக சொல்லியதில் உறுதியாக இருக்கிறேன்.
அது எனது ஓய்வு காலம் வரையில் நான் ஆர்சிபி அணிக்காக தான் விளையாடுவேன்' என கோலி தெரிவித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்னதாக இந்திய அணியை டி20 போட்டியில் வழிநடத்தும் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகும் அறிவிப்பை விராட் கோலி வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.