விராட் கோலி எவ்வளவு ஆபத்துனு இனி தான் தெரியும்; முன்னாள் வீரர் !!
கேப்டன் பதவியில் இருந்து விலகிவிட்டதால் விராட் கோலி இனி வரும் போட்டிகளில் எவ்வித அழுத்தமுமின்றி சிறப்பாக விளையாடுவார் என முன்னாள் இந்திய வீரரான கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
கடந்த 7 வருடங்களுக்கு மேலாக இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி வந்த விராட் கோலி, நடந்து முடிந்த டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பிறகு டி.20 போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து விலக உள்ளதாக திடீரென அறிவித்திருந்தார்.
பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக டி20 போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து மட்டும் விலகுவதாக அறிவித்திருந்த விராட் கோலி, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகும் திட்டம் இல்லை என்றும் அறிவித்திருந்தார்.
இதனால் டி.20 போட்டிகளுக்கான இந்திய அணியின் புதிய கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். சமீபத்தில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டி.20 தொடரில் இந்திய அணியை மிக சிறப்பாக ரோஹித் சர்மா வழிநடத்தியதால்,
விராட் கோலியை ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.
முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் விராட் கோலிக்கு ஆதரவாகவும், எதிராகவும் பேசி வந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு விராட் கோலி இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ., திடீரென அறிவித்தது.
விராட் கோலி திடீரென கேப்டன் பதவியில் இருந்து திடீரென நீக்கப்பட்டது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் வீரர்கள் பலர் விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து தங்களது கருத்துக்களை ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், விராட் கோலி குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் இந்திய வீரரான கவுதம் கம்பீர், இனி வரும் தொடர்களில் விராட் கோலியிடம் இருந்து ஆக்ரோஷமான ஆட்டத்தை எதிர்பார்க்கலாம் என தெரிவித்துள்ளார்.