கேப்டன் பதவியிலிருந்து விலக காரணம் இது தானா? வெளியான அதிர்ச்சி தகவல்
டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தும் பொறுப்பில் இருந்து வரும் டி20 உலக கோப்பை தொடருக்கு பின்னதாக விலகுவதாக தெரிவித்துள்ளார் கேப்டன் விராட் கோலி.
வேலை பளு அதிகம் இருப்பதால் இந்த முடிவு என விளக்கம் கொடுத்திருந்தார் கோலி. ஆனால் அதற்கு பின்னால் சில காரணங்கள் இருப்பதாக சொல்லப்பட்டது.
இந்நிலையில், இங்கிலாந்து தொடரில் கேப்டனாக அவர் வீரர்களை நடத்திய விதம் சரியில்லை என இந்திய அணியின் சீனியர் பேட்ஸ்மேன்கள் இருவர் பிசிசிஐ செயலாளரிடம் போன் மூலம் புகார் கொடுத்ததாக தெரிகிறது.
அதையடுத்து வீரர்களிடம் அவரது கேப்டன்சி குறித்து சில விவரங்கள் கேட்கப்பட்டதாக தெரிகிறது. அதனடிப்படையில் அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள பிசிசிஐ திட்டமிட்டு இருந்ததாம்.
ஆனால் விராட் கோலி அதற்கு முன்னதாகவே பதவி விலகியதாக சொல்லப்படுகிறது. நியூசிலாந்து அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவியை பிறகே வீரர்கள் இந்த புகார்களை பிசிசிஐ-க்கு தெரிவித்துள்ளனர்.
அந்த இறுதி போட்டிக்கு பிறகு பேட்ஸ்மேன்களின் மந்தமான ஆட்டம் தான் எதிரணி பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த அடிப்படை காரணமாக அமைந்தது என பேட்ஸ்மேன்களை குறை சொல்லி இருந்தார் கோலி.
வீரர்களின் கருத்துகளை அடிப்படையாக கொண்டு பிசிசிஐ அவர் மீது நடவடிக்கை எடுக்க தயாராக இருந்த நிலையில் தான் கோலி கேப்டன் பதவியை துறந்ததாக சொல்லப்பட்டது.
இருப்பினும் ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் கேப்டனாக தொடருவாரா? இல்லையா என்பது வரும் டி20 உலக கோப்பை தொடர் முடிந்த பிறகே தெரியும்.