கிரிக்கெட்டில் எந்த வீரரும் செய்யாத சாதனை - வரலாறு படைத்த விராட் கோலி
விராட் கோலி கிரிக்கெட் வரலாற்றில் எந்த வீரரும் செய்யாத சாதனையை படைத்துள்ளார்.
300வது போட்டி
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இன்று நியூசிலாந்து மற்றும் இந்தியாவிற்கு இடையேயான போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில், 9 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் குவித்தது. 250 என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி ஆடி வருகிறது.
விராட் கோலி
இந்த போட்டியில் விராட் கோலி களமிறங்கியதன் மூலம் கிரிக்கெட் வரலாற்றில் எந்த வீரரும் செய்யாத சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். இந்த போட்டி மூலம் 300 ஒரு நாள் போட்டி, 100க்கும் ,மேற்பட்ட டெஸ்ட், 100க்கு மேற்பட்ட T20 போட்டிகளில் ஆடிய ஒரே வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் போன்ற பல ஜாம்பவான்கள் 300 ஒருநாள் போட்டி மற்றும் 100 டெஸ்ட் போட்டிகளில் ஆடி இருந்தாலும், அவர்கள் யாரும் 100 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடியதில்லை. இதே போல் ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் 100 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி இருந்தாலும் 300 ஒருநாள் போட்டி மற்றும் 100 டெஸ்ட் போட்டிகளில் ஆடவில்லை.
2008 ஆம் ஆண்டு முதல் ஒருநாள் போட்டிகளில் ஆடி வரும் விராட் கோலி, 123 டெஸ்ட் போட்டிகளிலும், 125 T20 போட்டிகளிலும் விளையாடி வருகிறார். மேலும், ஒருநாள் போட்டிகளில் வேகமாக 10,000 ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் மற்றும் அதிக சதங்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளார்.