நடிகை படத்துக்கு லைக்; நான் எந்த தப்பும் பண்ணல - பதறியடித்து விளக்கமளித்த கோலி
நடிகையின் புகைப்படத்திற்கு லைக் செய்தது குறித்து கோலி விளக்கமளித்துள்ளார்.
லைக்கால் சர்ச்சை
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் விராட் கோலி. இன்ஸ்டாகிராமில் இந்திய அளவில் அதிக ரசிகர்களை வைத்துள்ளார். சமீபத்தில் பல்வேறு விளம்பரப் பதிவுகளை நீக்கியிருந்தார்.
தொடர்ந்து சொந்த விவகாரங்களைப் பற்றிய பதிவுகளை மட்டுமே வெளியிடுவார் என கூறப்பட்டது. அதன்படி, மனைவி அனுஷ்கா சர்மாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்காக ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.
கோலி விளக்கம்
பின், பாலிவுட் நடிகை அவ்னீத் கவுரின் கவர்ச்சியான புகைப்படங்களுக்கு வரிசையாக லைக் செய்திருந்தார். இதனைக் கண்ட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது பெரும் விவாதத்தையே கிளப்பியதாக கூறலாம். இந்நிலையில் விராட் கோலி இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்திருக்கிறார்.
"இன்ஸ்டாகிராமில் எனக்கு காட்டப்பட்ட பதிவுகளை நீக்கிக்கொண்டிருந்தபோது, அல்காரிதம் தவறுதலாக சில 'லைக்'களைப் பதிவு செய்திருக்கலாம் என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
இதற்குப் பின்னால் எந்த நோக்கமும் இல்லை. தேவையில்லாத அனுமானங்களைச் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். உங்களின் புரிதலுக்கு நன்றி'" என தெரிவித்துள்ளார்.