விராட் கோலியின் டாட்டூஸ், ஹேர்ஸ்டைல்.. coachசொன்ன ரகசியம் - ரசிகர்கள் ஆச்சரியம்!
திருமணத்திற்கு பின் விராட் கோலிக்கு கடவுள் நம்பிக்கை அதிகமாகிவிட்டதாக அவரது சிறுவயது கோச் பேசியுள்ளார்.
விராட் கோலி
சாம்பியன்ஸ் டிராஃபி தொடர் பாகிஸ்தானில நடைபெற்று வருகிறது. இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது. அதன்படி, நேற்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதினர்.டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.
49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்களில் சுருண்டது.242 ரன் எடுத்தால் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி இந்திய அணி, 42.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இது குறித்து விராட் கோலியின் சிறு வயது பயிற்சியாளரான ராஜ்குமார் சர்மா பேசுகையில்,’இந்த போட்டியினை காண தனக்கு டிக்கெட் வாங்கி கொடுத்தது விராட் தான்.ஒரு பயிற்சியாளருக்கு இதைவிட திருப்தியும் பெருமையும் வேறு எதில் இருக்கிறது.
கோலியைத் தவிர வேறு யாரும் இந்தியாவுக்காக இவ்வளவு போட்டிகளை வென்று கொடுத்திருப்பார்களா என்று எனக்கு தெரியவில்லை என்று கூறினார். மேலும் விராட் கோலி மீது எப்போதுமே அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது .இதனால் அவர் தொடர்ந்து போட்டிகளில் விளையாடுவார்
சிறுவயது கோச்
விராட் கோலியின் உடல்தகுதியை வைத்து யாரிடமும் ஒப்பிட வேண்டாம் என்று கூறினார். தொடர்ந்து பேசியவர் விராட் கோலி போட்டிருக்கும் டாட்டூஸ், ஹேர்ஸ்டைல் எல்லாம் பார்க்கும் போது அவர் அடாவடியான இளைஞர் என்று பலரும் நினைக்கிறார்கள்.ஆனால் இது முற்றிலும் தவறு.
அவருடன் பழகி பார்த்தால் மட்டுமே அவர் எப்படி பட்டவர் என்பது தெரியும். திருமணத்திற்கு பின் விராட் கோலிக்கு கடவுள் நம்பிக்கை அதிகமாகி மாறியிருப்பதாக தெரிவித்துள்ளார். சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானை வெற்றி பெற்று இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேிறி உள்ளது குறிப்பிடத்தக்கது.