‘என்ன கொடும சரவணா இது’- வைரலாகும் கேப்டன் விராட் கோலியின் க்யூட் வீடியோ

viral new zealand virat kohli cute video test series
By Swetha Subash Dec 05, 2021 01:30 PM GMT
Report

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

போட்டியின் இரண்டாவது நாளான நேற்று இந்திய அணி தன்னுடைய முதல் இன்னிங்ஸை தொடர்ந்தது.

இந்திய அணி 325 ரன்களுக்கு தன்னுடைய அனைத்து விக்கெட்டையும் இழந்த நிலையில் முதல் இன்னிங்ஸின் 10 விக்கெட்டையும் நியூசிலாந்து வீரர் அஜாஸ் பட்டேல் எடுத்து சாதனைப் படைத்தார்.

இதனை தொடர்ந்து நேற்று தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணி ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் எடுத்திருந்தது.

நான்காவது நாளான இன்று இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது. அதில் சிறப்பாக பந்துவீசிய அஜாஸ் பட்டேல் 4 விக்கெட் எடுத்து அசத்தினார்.

இந்திய அணி தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் 7விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அத்துடன் நியூசிலாந்து அணிக்கு 540 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது இந்திய அணி.

இதைத் தொடர்ந்து நியூசிலாந்து அணி தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி 13 ரன்களுக்கு ஒரு விக்கெட் இழந்து தடுமாறியது.

அப்போது மைதானத்தில் இருந்த ஸ்பைடர் கேமரா கீழே இறங்கிய நிலையில் கேமராவை மேலே இழுக்க முயற்சி மேற்கொள்ள பட்டது. எனினும் அந்த கேமராவை மேலே இழுக்க முடியவில்லை.

இதை பார்த்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அங்கு வந்து நடிகர் ப்ரேம்ஜி திரைபடத்தில் கேட்கும் வகையில்‘என்ன கொடுமை சார் இது’என்பது போல செய்கை செய்தார்.

விராட் கோலியின் இந்த க்யூட்டான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.