தோனியின் ஆல் டைம் ரெக்கார்டை உடைத்த விராட் கோலி - அடுத்தது சச்சின் தான்!

Sumathi
in கிரிக்கெட்Report this article
மேட்ச் வின்னராக தோனியின் ஆல் டைம் சாதனையை கோலி உடைத்துள்ளார்.
விராட் கோலி
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி முதல் இன்னிங்ஸில் அபாரமாக விளையாடி 76 ரன்கள் சேர்த்தார். தொடர்ந்து, 141 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இதன் மூலம் விராட் கோலி பங்கேற்று இந்திய அணி 296 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. அதன்படி, தோனியின் சாதனையை விராட் கோலி முறியடித்திருக்கிறார். தோனி பங்கேற்று இந்திய அணி 295 போட்டிகளில் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய சாதனை
மேலும், இந்திய கிரிக்கெட் வரலாற்றிலே அதிக வெற்றிகளை பெற்ற வீரர் என்று பெருமையை சச்சின் டெண்டுல்கர் படைத்திருக்கிறார். தற்போது விராட் கோலி 296 வரை வந்துவிட்டதால், இந்த ஆண்டு சச்சின் சாதனையை முறியடித்து விட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், கோலி வெஸ்ட் இண்டீஸ் எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்றால் அவர் இந்தியாவுக்காக 500 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையை பெறுவார்.
சச்சின், தோனி, டிராவிட் ஆகியோருக்கு பிறகு விராட் கோலி இந்த மைல் கல்லை எட்டவுள்ளார்.