விராட் கோலியின் பிறந்த நாள் இன்று..அவர் கடந்து வந்த கரடு முரடான வாழ்க்கை தொகுப்பு
டெல்லியைச் சேர்ந்த விராட் கோலி, இந்திய U-19 அணி உலகக் கோப்பை வென்றபோது, அந்த அணிக்கு கேப்டனாக இருந்தவர்.
தொடர்ந்து ரன்களை குவித்து வந்ததால், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணிக்காக விளையாடியபோதே கோலி பிரபலமான வீரராக இருந்தார்.
இதனால், உடனே இந்திய அணியில் இடம் கிடைத்தது. 2008-ல் ஐபிஎல் தொடங்கியபோது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாட துவங்கினார்.
இந்நிலையில் 2012-ல் அவருக்கு கேப்டன் பதவி கிடைத்தது. இந்த வருடத்துடன் அப்பதவியிலிருந்து விலகிவிட்டார்.
இவர் கிரிக்கெட் உலகில் பல முறியடிக்க முடியாத சாதனைகளை படைத்து ரன் மிஷின் என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார்.
இவரால் கடந்த இரண்டு வருடங்களாக ஒரு சதம் கூட அடிக்க முடியவில்லை. இந்த பிறந்த நாளுக்கு பிறகு நிச்சயம் பழைய கோலி திரும்பி வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
தற்போது கோலி குறித்த 3 சுவாரசிய தகவல் குறித்து பார்ப்போம்.
2008ஆம் ஆண்டு இலங்கை சுற்றுப் பயணத்தில் இந்திய அணி பங்கேற்றபோது விராட் கோலி 12ஆவது வீரராக சேர்க்கப்பட்டிருந்தார்.
XI அணியில் இருந்த சச்சின் டெண்டுல்கருக்கு காயம் ஏற்பட்டதும், விராட் கோலி களமிறக்கப்பட்டார். இதுதான் விராட் கோலிக்கு முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியாகும்.
அதன்பிறகு விராட் கோலி, தொடர்ந்து ரன்களை குவித்து கிரிக்கெட் உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
2012ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இந்தியா, இலங்கை அணிகள் பங்கேற்றன.
அப்போது இலங்கைக்கு எதிரான போட்டியில் 40 ஓவர்களில் 320 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தது.
அந்த சமயத்தில் விராட் கோலி களிமறங்கி காட்டடி அடித்து, 86 பந்துகளில் 133 ரன்கள் சேர்த்தார். இலங்கை பௌலர்களால் கோலியை ஒரு இடத்தில்கூட கட்டுப்படுத்த முடியவில்லை.
இறுதியில் இந்தியா நம்ப முடியாத வெற்றியைப் பெற்றது. விராட் கோலியும், அனுஷ்கா ஷர்மாவும் கிட்டதட்ட 5 வருடங்களாக காதலித்து வந்தனர்.
அப்போது இங்கிலாந்தில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் பங்கேற்க போகும்போது, அனுஷ்கா ஷர்மா தன்னுடன் வர பிசிசிஐ அனுமதிக்க வேண்டும் என கோலி கடிதம் எழுதினார்.
காதலியை வெளிநாட்டு சுற்றுப் பயணத்தின்போது அழைத்துச் செல்ல கூடாது என்பது விதிமுறையாக இருந்தது. விராட் கோலிக்காக அந்த விதிமுறை தளர்த்தப்பட்டது.