விராட் கோலிக்கு இன்று பிறந்தநாள் - தடைக்கல்லை தகர்த்தெறிந்த சாதனை வீரன்...!

Virat Kohli Birthday
By Nandhini Nov 05, 2022 07:04 AM GMT
Report

விராட் கோலி பிறந்தநாள்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தனது 34 வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். அவருக்கு கிரிக்கெட் ரசிகர்கள், பிரபலங்கள் மற்றும் பலர் சமூகவலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தடைக்கல்லைத் தகர்த்தெறிந்த சாதனை வீரன்

இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலி கிரிக்கெட்டில் பல சாதனைகளை செய்தவர். ஆனால், சமீப கடந்த ஆண்டுகளாக அவர் தனது விளையாட்டில் தொடர்ந்து சொதப்பி வந்தார்.

சர்வதேச கிரிக்கெட் தொடங்கி, உள்ளூர் கிரிக்கெட் வரையில் ரன் குவிப்பதில் வல்லவரான விராட் கோலி, அவரின் போதாத நேரம் என்பது போல ஐபிஎல் சீசன் தொடரில் சொதப்பினார். தொடர்ந்து விராட் கோலி சொதப்பி வந்ததால், அவரை நேர்முகமாகவும், மறைமுகமாகவும் பலர் குற்றம் சாடினார்கள். இதனால் அவர் மனதளவில் மிகவும் சோர்வடைந்தார்.

ஆனாலும் விராட் கோலிக்கு, அவரது ரசிகர்களும், அணி நிர்வாகம் ஆதரவு கொடுத்தே வந்தது.

பழைய பார்முக்கு திரும்பிய விராட் கோலி

சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் மீண்டும் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதியன. இப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் அரைசதம் அடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் விராட் கோலி.

virat-kohli-birthday

சாதனை படைத்த விராட் கோலி

சமீபத்தில் நடைபெற்ற T20 உலக கோப்பை போட்டியில் வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்.

இப்போட்டியில் இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 64 எடுத்துள்ளார். இது நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் கோலியின் 3வது அரைசதமாகும்.

டி20 உலகக் கோப்பை தொடர்களில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 1017* ரன்களை கடந்து விராட் கோலி முதலிடத்தைப் பிடித்து மாபெரும் சாதனை படைத்துள்ளார்.

சாதனை படைத்துள்ள விராட் கோலிக்கு அவருடைய ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் பதிவிட்டு தெறிக்க விட்டு வருகின்றனர்.