விராட் கோலி மீது யாரும் புகார் கொடுக்கவில்லை - கொந்தளித்த பிசிசிஐ
India
Cricket
Team
Virat Kohli
BCCI
By Thahir
கேப்டன் விராட் கோலி மீது எந்த வீரரும் புகார் அளிக்கவில்லை என பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டிக்கு முன்பு நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கான டெஸ்ட் போட்டியில் விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மூத்த வீரர்கள் பிசிசிஐயில் புகார் கொடுத்துள்ளதாக செய்திகள் பரவின.
இந்த செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள பிசிசிஐ பொருளாளர் அருண் துமால், ஊடகங்கள் இதுபோன்ற தவறான செய்திகளை வெளியிடுவதை நிறுத்த வேண்டும்.
எந்தவொரு இந்திய கிரிக்கெட் வீரரும் பிசிசிஐயிடம் புகார் அளிக்கவில்லை.
ஒவ்வொருமுறையும் வெளியாகும் தவறான செய்திகளுக்கு பிசிசிஐ விளக்கம் அளித்துக்கொண்டிருக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.