அனைத்து விமர்சனங்களுக்கும் சரியான பதிலடி கொடுத்த விராட் கோலி - மகிழ்ச்சியில் ரசிகர்கள்

Viratkohli RCBvCSK
By Petchi Avudaiappan Sep 24, 2021 09:32 PM GMT
Report

 ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி அரைசதம் அடித்து மீண்டும் பார்ம்க்கு திரும்பியுள்ளார்.

ஐபிஎல் டி20 தொடரின் 35வது போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கோலி தலைமையிலான பெங்களூர் அணியும் நேற்று மோதின.

இப்போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பெங்களூர் அணியில் தொடக்கவீரரான விராட் கோலி சென்னை அணியின் பந்துவீச்சை அசால்டாக எதிர்கொண்டு 53 ரன்கள் விளாசினார்.

அதேநேரம் கடந்த போட்டிகளில் சொதப்பியதால் கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட அவர் இந்த போட்டியில் ஒவ்வொரு ஷாட்களையும் நேர்த்தியாக அடித்து அசத்தினார். இதன்மூலம் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விராட் கோலி பதிலடி கொடுத்து விட்டதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.