இவர் இப்படி விளையாடுவார் என நினைத்து கூட பார்க்கவில்லை: விராட் கோலி புகழாரம்
2021 சீசன் ஐபிஎல் போட்டியில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் பெங்களூர் - டெல்லி அணிகள் மோதின .இதில் பெங்களூர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
இதில் முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் குவித்தது இதன்பிறகு 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கியது.
ஆனால் 55 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து பெங்களூர் அணி தடுமாறியது. இதன்பிறகு மேக்ஸ்வெல்- கே.எஸ்.பரத் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றனர்.
குறிப்பாக பெங்களூர் அணி வெற்றிபெற கடைசி பந்தில் 5 ரன் தேவைப்பட்டது. அப்போது ஆவேஷ்கான்வீசிய பந்தை எதிர்கொண்ட கே.எஸ்.பரத் சிக்சருக்கு அடித்தார்.
இதனால் பெங்களூர் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது .இந்நிலையில் வெற்றி குறித்து கேப்டன் விராட் கோலி கூறும்போது," இது நம்ப முடியாத வெற்றியாக இருந்தது .
இப்போட்டியால் நாங்கள் எதையும் இழக்க மாட்டோம் என்பது தெரியும் .அதோடு புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடுவது நல்லதாகும்.
நடப்பு சீசனில் டெல்லி அணியை நாங்கள் இரண்டு முறை தோற்கடித்து உள்ளோம் .குறிப்பாக இந்தப் போட்டியில் மேக்ஸ்வெல் -கே.எஸ் .பரத் ஜோடியின் பார்ட்னர்ஷிப் சிறப்பாக அமைந்தது.
அதோடு கே.எஸ்.பரத் சிறப்பாக விளையாடினார் .அவர் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக நன்றாக விளையாட கூடியவர்.
அதோடு புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேற 163 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது என்பது கடினமானது என்பதால்தான் முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தோம்.
அதோடு ரன் இலக்கை நோக்கி விளையாடி வெற்றி பெறுவது பிளே ஆப் சுற்றுக்கு செல்லும்போது பலவிதமான நம்பிக்கையை தரும்.
தற்போது நாங்கள் பீல்டிங்கில் முன்னேற்றம் காணவேண்டும் என நான் கண்டிப்பாக நினைக்கிறேன் ஏனெனில் ப்ளே ஆப் சுற்றுக்கு வரும்போது எந்த அணியும் இரண்டாவது வாய்ப்பை வழங்காது " இவ்வாறு விராட் கோலி கூறியுள்ளார்.

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிரு்நத நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan
