விராட் கோலி ரன் குவிக்க அவ்வளவு பசியோடு இருப்பார் - ஆட்டத்தை குறித்து புகழ்ந்து தள்ளி ஆஸ்திரேலிய வீரர்...!

Virat Kohli Cricket Australia Cricket Team
By Nandhini Feb 08, 2023 07:48 AM GMT
Report

விராட் கோலி ரன் குவிக்க அவ்வளவு பசியோடு இருப்பார் என்று அவரை ஆஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் புகழ்ந்து பேசியுள்ளார்.

இந்தியாவிற்கு எதிரான ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இப்போட்டி நாளை முதல் மார்ச் 13ம் தேதி வரை இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது.

இந்த டெஸ்ட் தொடர் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கானது என்பதால் அதை 3-0 அல்லது 2-0 என வென்றால் தான் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 2ம் இடத்தை பிடித்து ஃபைனலுக்கு முன்னேற முடியும். எனவே, இந்திய அணிக்கு இத்தொடர் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

virat-kohli-australian-player-marcus-stoinis

கோலியை புகழ்ந்து தள்ளி ஆஸ்திரேலிய வீரர்

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை குறித்து ஆஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் செய்தியாளர்களிடம் பேசும்போது புகழ்ந்து தள்ளியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், கிரிக்கெட் உலகில் விராட் கோலி ஒரு மிகப்பெரிய வீரர்ராவார்.

அவருடைய தற்போதுள்ள வயதிற்கும், அவர் கிரிக்கெட்டில் தற்போது இருக்கும் நிலைக்கும் அவர், நாளை நடக்க இருக்கும் இத்தொடரை சிறப்பாக பயன்படுத்த வேண்டும் என்று நினைப்பார். விராட் கோலி போன்ற சிறந்த வீரர்கள் எப்போதும் கிரிக்கெட் தொடரை சிறந்த தொடராக தேர்வு செய்வார்கள்.

டி20 உலகக்கோப்பையில் அவர் எவ்வளவு சிறப்பாக விளையாடினார் என்பதை நாம் அனைவரும் பார்த்தோம்.

அவர் ரன் குவிக்க எவ்வளவு பசியோடு இருக்கிறார். அவர் நிச்சயமாக எங்களை பின்னுக்கு தள்ளக்கூடியவர்தான். இத்தொடரை வெல்ல நாங்கள் அவரை சிறப்பாக கையாள வேண்டும். அவரை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார்.