அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தை பிடித்த விராட் கோலி - ரசிகர்கள் குதூகலம்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தை பிடித்துள்ளார்.
விராட் கோலி
இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலி கிரிக்கெட்டில் பல சாதனைகளை செய்தவர். இவர் சமீபமாக தனது விளையாட்டில் தொடர்ந்து சொதப்பி வந்தார்.
சர்வதேச கிரிக்கெட் தொடங்கி உள்ளூர் கிரிக்கெட் வரையில் ரன் குவிப்பதில் வல்லவரான விராட் கோலி கிரிக்கெட் உலகில் ரன் மெஷின் என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். ஆனால் அவரின் போதாத நேரம் என்பது போல சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் சீசன் தொடரில் சொதப்பினார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் அனைத்து சீசன்களையும் சேர்த்து 6499 ரன்களை பதிவு செய்துள்ள அவர் நடப்பு சீசனில் மொத்தம் 12 போட்டிகளில் விளையாடி 216 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.
6 முறை ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி உள்ள கோலி ஒரே ஒரு அரை சதம் மட்டுமே அடித்தார். 3 போட்டிகளில் அவர் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். ஆனாலும் அவருக்கு அணி நிர்வாகம் ஆதரவு கொடுத்தே வருகிறது.
பழைய பார்முக்கு திரும்பிய விராட் கோலி
தற்போது நடந்து முடிந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் அரைசதம் அடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் விராட் கோலி. குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி அரைசதம் அடித்தது அவரது ரசிகர்களுக்கு பெரும் சந்தோஷத்தை கொடுத்தது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான சூப்பர் ஃபோர் சுற்று ஆட்டத்திலும், விராட் கோலி 61 பந்துகளில் 122 ரன்களை விளாசினார்.
2வது இடத்தை பிடித்த கோலி
விராட் கோலி டி20 பேட்ஸ்மேனுக்கான தரவரிசை பட்டியலில் சிங்கப் பாய்ச்சலை பாய்ந்துள்ளார்.
தற்போது அவர் 14 இடங்கள் முன்னேறி 15-வது இடத்தை பிடித்திருக்கிறார். இதேபோன்று கே எல் ராகுல் ஆப்கானிஸ்தான் எதிராக அரை சதம் விளாசியசதன் மூலம் 30வது இடத்திலிருந்து 23வது இடத்திற்கு முன்னேறியிருக்கிறார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தை பிடித்திருக்கிறார்.
இந்தியா தற்போது தொடர்ந்து டி20 போட்டியில் விளையாட் போவதால் கோலி மீண்டும் டாப் 5 இடத்தை பிடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.
அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தை விராட் கோலி பிடித்துள்ளதால் இது அவரது ரசிகர்கள் குதூகலப்படுத்தியுள்ளது.