Saturday, Jul 26, 2025

விலை உயர்ந்த சொகுசு காருடன் திருமண நாளை கொண்டாடிய விராட் கோலி

Wedding Virat Kohli Anniversary Anushka Sharma
By Thahir 4 years ago
Report

கடந்த சில நாட்களாவே விராட் கோலியின் பெயர் தான் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களின் வாயிலும் ஒலித்தது.

இவ்வளவு சாதனைகளை செய்த விராட் கோலியை ஒரு செய்தி அறிக்கையின் மூலமாக பதவியிலிருந்து தூக்குவதா என ரசிகர்கள் கொந்தளிந்தனர்.

இது தொடர்பாக விராட் கோலி எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை. இதனால் கோலி சோகமா இருக்கிறாரோ என அவரது ரசிகர்கள் நினைத்தனர் ஆனால் விராட் கோலியோ இதை பற்றி கண்டு கொள்ளாமல் தனது வாழ்க்கையை ஜாலியாகவே வாழ்ந்து வருகிறார்.

விக்கி கவுசல், கெத்ரினா திருமணத்திற்கு விராட் கோலியும் அவரது மனைவி அனுஷ்காவும் சென்றதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் விராட் கோலி, அனுஷ்கா ஜோடிக்கு இன்று 4வது திருமண நாள் இதனால் காலை முதலில் இருந்தே விராட் கோலி ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், விராட் கோலி காலையிலேயே தனது விலை உயர்ந்த சொகுசு காரை எடுத்து கொண்டு மும்பையில் வலம் வந்தார்.

பின்னர் தனது மனைவி, குழந்தை வாமிக்காவுடன் விராட் கோலி திருமண நாளை கொண்டாடினார்.இதனையடுத்து மூவரும் செல்ஃபி எடுத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இந்த நிலையில், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வரும் 13ஆம் தேதி பயோ பபுளுக்கு செல்கிறது. இதனையடுத்து வரும் 17ஆம் தேதி தென்னாப்பிரிக்கா தொடருக்கு இந்தியா புறப்பட்டு செல்கிறது.