ஆன்மீக பயணம் மேற்கொண்ட விராட் கோலி, அனுஷ்கா - வைரலாகும் புகைப்படம்..!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக ரிஷிகேஷில் விராட், அனுஷ்கா ஆன்மீக பயணம் மேற்கொண்டனர்.
விராட், அனுஷ்கா ஆன்மீக பயணம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய டெஸ்ட் தொடர் வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி நாக்பூரில் தொடங்க உள்ளது. இதற்கு முன்னதாக, கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா ரிஷிகேஷ்க்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டனர்.
உத்தரகண்ட், விருந்தாவனத்தில் உள்ள விராட் கோலியும், அனுஷ்காவும் சுவாமி தயானந்த கிரி ஆசிரமத்திற்கு வருகை தந்தனர்.
இதனையடுத்து, இருவரும் ஆசிரமத்தில் வழிபாடு செய்தனர். வழிபாடு செய்த பிறகு, ஆசிரமத்திற்கு வந்திருந்த பக்தர்கள் இவர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.
விராட் மற்றும் அனுஷ்கா ஆகியோர் ஆசிரமத்தில் நடைபெறும் பொது மதச் சடங்குகளில் கலந்துகொண்டனர். தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவைலத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Virat, and Anushka take a spiritual break in Rishikesh ahead of the Test series against Australia#anushkasharma #ViratKohli? #Rishikesh #test #INDvsAUS pic.twitter.com/YH8X94dfbz
— CrickHit (@crickhitsocial) January 31, 2023