கோலி பற்றி இப்போ பேசுங்க பார்ப்போம் அனுஷ்கா எடுத்த துணிச்சல் முடிவு
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலிக்கு தற்போது நேரம் காலமே சரி இல்லை ஏற்கனவே டி20 கேப்டன் பதவி,
ஐ.பி.எல். கேப்டன் பதவி என இரண்டையும் கோலி ராஜினாமா செய்தார்.ஆனால், பி.சி.சி.ஐ. அவரின் ஒரு நாள் போட்டிக்கான கேப்டன் பதவியையும் விட்டு தூக்கியது.
தற்போது விராட் கோலியின் டெஸ்ட் கேப்டன் பதவிக்கும் சிக்கல் எழுந்துள்ளது. அதற்கு காரணம் விராட் கோலி அளித்த பேட்டி தான் என்று கூறப்படுகிறது.
தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, அங்கு 3 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் முதலில் விளையாடுகிறது.
இதற்காக இந்திய அணி வீரர்கள் தென்னாப்பிரிக்காவிற்கு விமானம் மூலம் சென்றனர். இந்த பயணத்தில் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவும்,
அவரது மகளும் சென்றனர் ஏற்கனவே ஓமைக்கரான் வைரஸ் அச்சுறுத்தல் தென்னாப்பிரிக்காவில் நிலவி வருகிறது.
இந்த நிலையில், விராட் கோலி தனது குடும்பத்துடன் அங்கு சென்றது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதற்கு காரணம், தென்னாப்பிரிக்கா தொடர் விராட் கோலியின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தொடராக கருதப்படுகிறது.
பி.சி.சி.ஐ.யிலிருந்து யாரும் தம்மை கேப்டன் பதவியை விட்டு விலக வேண்டாம் என்று சொல்லவில்லை என்று விராட் கோலி கூறியது, கங்குலியை தர்ம சங்கடத்திற்கு ஆளாக்கியது.
இதனால் இந்தப் பிரச்சினை கங்குலிக்கும், விராட் கோலிக்கும் இடையிலான பிரச்சினையாக மாறிவிட்டது. இதனால் விராட் கோலி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பி.சி.சி.ஐ.யின் முக்கிய நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனால் தென்னாப்பிரிக்க தொடரை விராட் கோலி இழந்தாலோ, இல்லை அணி தேர்வில் தவறு செயதாலோ, இல்லை ரன் எடுக்காமல் சொதப்பினாலோ நிச்சயம் அவரது கேப்டன் பதவிக்கு ஆபத்து ஏழும்.
மேலும் தென்னாப்பிரிக்க மண்ணில் இந்தியா இதுவரை டெஸ்ட் தொடரை வென்றது இல்லை. இதனால் டெஸ்ட் தொடரை வென்று கேப்டன் பதவியை தக்க வைக்க விராட் கோலி தீவிர முயற்சியில் உள்ளார். அவருக்கு உற்சாகம் அளிக்கவே அனுஷ்கா சர்மாவும் அங்கு சென்றுள்ளார்.