டெஸ்டில் ஓய்வை அறிவித்தார் விராட் கோலி - உருக்கமான பதிவு!

Virat Kohli Indian Cricket Team
By Sumathi May 12, 2025 06:37 AM GMT
Report

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விராட் கோலி ஓய்வை அறிவித்துள்ளார்.

virat kohli

இந்திய டெஸ்ட் அணியில் இருந்து ரோகித் சர்மா விலகியதோடு, விராட் கோலியும் விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

"டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் முதன்முதலில் பேக்கி ப்ளூவை அணிந்து 14 ஆண்டுகள் ஆகின்றன. உண்மையைச் சொன்னால், இந்த வடிவம் என்னை அழைத்துச் செல்லும் பயணம் என்று நான் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை.

இது என்னை சோதித்தது, என்னை வடிவமைத்தது, மேலும் நான் வாழ்நாள் முழுவதும் சுமந்து செல்லும் பாடங்களைக் கற்றுக் கொடுத்தது... நான் எப்போதும் என் டெஸ்ட் வாழ்க்கையை ஒரு புன்னகையுடன் திரும்பிப் பார்ப்பேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.