வெற்றி, தோல்வியெல்லாம் சகஜம்; ஷாரூக் கானுடன் ஆட்டம் போட்ட விராட் கோலி - Vibe பண்ண RCB
ஷாரூக் கானுடன், விராட் கோலி இணைந்து குத்தாட்டம் போட்டது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
KKRvsRCB
16வது ஐபிஎல் சீசனுக்கான 9வது லீக் போட்டியில் பெங்களூரு அணியை எதிர்த்து கொல்கத்தா அணி விளையாடியது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி ஷர்துல் தாகூர் அதிரடியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ரன்கள் குவித்தது.
இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 17.4 ஓவர்களில் 123 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதனால் கொல்கத்தா அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது.
வைரல் வீடியோ
இந்தப் போட்டியை நேரில் காண கேகேஆர் அணியின் உரிமையாளரும் நடிகருமான ஷாரூக் கான், அவரது மகன் சுஹானா கான், நடிகை ஜூஹி சாவ்லா உள்ளிட்டோர் வந்திருந்தனர். வெற்றியைத் தொடர்ந்து, கேகேஆர் அணி வீரர்களை சந்தித்து ஷாரூக் கான் வாழ்த்து கூறினார்.
SRK and Virat Kohli doing Jhoome Jo Pathaan step together ??❤️❤️ #KKRvRCBpic.twitter.com/53DZDjkM4v
— S. (@Sobuujj) April 6, 2023
அதேபோல் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியையும் சந்தித்தார். அப்போது ஷாரூக் கான் - விராட் கோலி இருவரும், ஜோமி ஜொ பதான் என்ற ஹிந்தி பாடலுக்கு மைதானத்திலேயே குத்தாட்டம் போட்டனர். இந்த நிகழ்வு ரசிகர்களின் கவனம் ஈர்த்து வைரலாகி வருகிறது.