வம்பிழுத்த ஜேம்ஸ் ஆண்டர்சன்… உடனடியாக பதிலடி கொடுத்த விராட் கோலி
இங்கிலாந்து அணி வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்திய அணி கேப்டன் விராட் கோலியிடம் வம்பிழுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து-இந்தியா இடையேயான 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இன்னும் ஒருநாள் ஆட்டம் மீதமிருக்கும் நிலையில் இரு அணிகளும் வெற்றிக்காக தீவிரம் காட்டி வருகிறது. இதனிடையே இங்கிலாந்து - இந்தியா வீரர்களுக்கு இடையேயான மோதல் அதிகரித்துள்ளது.
குறிப்பாக நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்டில் வேகப்பந்து வீச்சாளர் சிராஜிடம் வம்பிழுத்த ஆண்டர்சன், 2வது டெஸ்டில் முதலில் பும்ராவிடம் சண்டைக்கு சென்றார். முதல் இன்னிங்ஸின் போது ஆண்டர்சன் விக்கெட்டை விரைந்து எடுக்க பும்ரா தொடர்ந்து பவுன்சர் பந்துகளாக வீசினார். அவை அவரின் உடலை பதம் பார்த்தது.
இதனால் கோபமடைந்த ஆண்டர்சன், போட்டி முடிந்தவுடன் பும்ராவிடம் கடுமையான வார்த்தைகளை உதிர்த்தார். இந்நிலையில் 4 ஆம் நாளான நேற்று இந்திய அணி தனது 2வது இன்னிங்ஸை விளையாட தொடங்கியது. அப்போது ஆட்டத்தின் 17வது ஓவரை ஆண்டர்சன் வீச, புஜாரா பேட்டிங் திசையில் இருந்தார். கோலி மறுமுணையில் நின்றுக்கொண்டிருந்தார்.
அவர்கள் ரன் ஓடலாம் என நினைத்த போது ஆண்டர்சன் பிட்சின் குறுக்கே நடந்துச்சென்றுக் கொண்டிருந்தார். இதனைக் கண்டு கடுப்பான விராட் கோலி , இது போட்டியின் பிட்ச் ஆண்டர்சன்...உங்கள் வீட்டு தோட்டம் கிடையாது, குறுக்கே நடந்துக்கொண்டிருப்பதற்கு" என தெரிவித்தார். அவரின் இந்த பேச்சு நடுவரின் மைக்கின் மூலம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
This isn't your backyard ???pic.twitter.com/gC4mgg8eap
— . (@imlaiba_) August 15, 2021