வந்தா ராஜாவாக தான் வருவேன்..! 8000 ரன்களை கடந்து சாதனை படைத்த விராட் கோலி
இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 போட்டியிலும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்தது. இதனிடையே இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மொஹாலியில் உள்ள மைதானத்தில் இன்று தொடங்கியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
போட்டி தொடங்கும் முன்பு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் 100வது டெஸ்ட் போட்டி என்பதால் அவருக்கு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நினைவு பரிசை வழங்கினார்.
இந்த நிகழ்வில் அவரது மனைவி அனுஷ்கா சர்மாவும் பங்கேற்றார். இதையடுத்து இந்திய அணியின் ரோஹித் சர்மா,மாயன்க் அகர்வால் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.
இந்த ஆட்டத்தில் ரோஹித் சர்மா 28 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். மாயன்க் அகர்வாலும் 33 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
இதையடுத்து 4-வது வீரராக களம் இறங்கிய விராட் கோலி அதிரடியாக ஆடி தனது 100-வது போட்டியில் 8,000 ரன்களை கடந்து புதிய மைல்கல்லை எட்டினார். டெஸ்ட் போட்டியில் 8,000 ரன்களை கடந்த 6-வது வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.
.@imVkohli breaches another milestone on his momentous day.
— BCCI (@BCCI) March 4, 2022
8000 and counting runs in whites for him ??#VK100 @Paytm #INDvSL pic.twitter.com/EDZz9kPZwy