தனது 45வது ஒருநாள் சதத்தை அடித்து விராட் கோலி சாதனை - குவியும் பாராட்டு

Virat Kohli Cricket
By Nandhini Jan 11, 2023 07:23 AM GMT
Report

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி தனது 45வது ஒருநாள் சதத்தை அடித்துள்ளார்.

சாதனைப் படைத்த விராட் கோலி

நேற்று கவுகாத்தியில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி 113 ரன்கள் குவித்தார். கிங் கோலியின் இந்த இன்னிங்ஸின் அடிப்படையில் இந்திய அணியும் 373 ரன்கள் எடுத்தது. மீண்டும் அபாரமான ஃபார்மில் திரும்பிய விராட் கோலி, சச்சின் டெண்டுல்கரின் சதங்களின் சாதனையை விரைவில் முறியடிக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது.

விராட் கோலி தனது கடைசி 2 ஒரு நாள் போட்டிகளில் சதம் அடித்துள்ளார். இதன் மூலம் அவரது மொத்த ஒருநாள் சதங்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் அதிக சதங்கள் அடித்த சாதனையில் இடம்பிடித்துள்ளார்.

சச்சின் தனது வாழ்க்கையில் 49 சதங்களை அடித்துள்ளார். தற்போது, 45 சதங்களை அடித்துள்ள விராட் கோலி இன்னும் 4 சதங்களை அடித்தால் சச்சின் சாதனையை சமன் செய்து விடுவார். அதே போல் 5வது சதத்தை அடித்தவுடன் 50 சதங்களையும் விராட் கோலி பூர்த்தி செய்ய உள்ளார். 

virat-kohli-45th-odi-century-cricket