என் கிரிக்கெட் வாழ்வில் ஏற்றம், இறக்கம் இரண்டையும் பார்த்துவிட்டேன்... - கண் கலங்கிய விராட் கோலி - சோகத்தில் ரசிகர்கள்
இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலி கிரிக்கெட்டில் பல சாதனைகளை செய்தவர். இவர் சமீபமாக தனது விளையாட்டில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். சர்வதேச கிரிக்கெட் தொடங்கி உள்ளூர் கிரிக்கெட் வரையில் ரன் குவிப்பதில் வல்லவரான விராட் கோலி கிரிக்கெட் உலகில் ரன் மெஷின் என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.
ஆனால் அவரின் போதாத நேரம் என்பது போல நடப்பு ஐபிஎல் சீசனில் அவர் தொடர்ந்து சொதப்பி வருகிறார். ஐபிஎல் கிரிக்கெட்டில் அனைத்து சீசன்களையும் சேர்த்து 6499 ரன்களை பதிவு செய்துள்ள அவர் நடப்பு சீசனில் மொத்தம் 12 போட்டிகளில் விளையாடி 216 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
6 முறை ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி உள்ள கோலி ஒரே ஒரு அரை சதம் மட்டுமே அடித்துள்ளார். இதில் 3 போட்டிகளில் அவர் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார்.
ஆனாலும் அவருக்கு அணி நிர்வாகம் ஆதரவு கொடுத்தே வருகிறது. சமீபத்தில் தான் 2வது முறையாக டக் அவுட் ஆன போது நம்பிக்கை இழந்து விட்டேன்.
இத்தனை ஆண்டு கால கிரிக்கெட் அனுபவத்தில் இப்படி ஒரு போதும் நடந்ததே இல்லை எனவும் விராட் கோலி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் விராட் கோலி பேசியதாவது -
பேட்டியின்போது செய்தியாளர், உங்கள் வீட்டில் விலங்குகள் எதுவும் வளர்க்கிறீர்களா என்று கேட்டார். இதற்கு கோலி பதிலளிக்கும் முன், உங்களுக்கு சமீபத்தில் 2 டக்குகள் கிடைத்ததே என கோலி டக் அவுட் ஆனதை கிண்டலாக குறிப்பிட்டார்.
நான் இப்போது அனைத்தையும் பார்த்துவிட்டேன். நீண்ட நாட்களாக கிரிக்கெட் விளையாடி வரும் நான், இந்த விளையாட்டு எனக்கு காட்டிய ஏற்றம், இறக்கம் என அனைத்தையும் பார்த்துவிட்டேன் என்று உருக்கமாக பேசியுள்ளார்.