விராட்கோலியின் 10ஆம் வகுப்பு மதிப்பெண் - வைரலாகும் மார்க்ஷீட்!
விராட் கோலியின் 10ஆம் வகுப்பு மார்க்ஷீட் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
விராட் கோலி
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கடந்த மே 12ஆம் தேதி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதுவரை 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 9,230 ரன்களை குவித்துள்ளார்.
மேலும் 30 சதங்களை விளாசியுள்ளார். இந்நிலையில், சிபிஎஸ்சி தேர்வுக்கான 10ஆம் வகுப்பு முடிவுகள் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியானது. இதில் கோலி 10ஆம் வகுப்பில் வாங்கிய மதிப்பெண் சான்றிதழ் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.
10ஆம் வகுப்பு மார்க்ஷீட்
2004ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு முடித்துள்ள விராட் கோலி மொத்தமாக 600 மதிப்பெண்களுக்கு 419 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இந்த மதிப்பெண் சான்றிதழை ஜிதின் யாதவ் என்ற ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் ‘மதிப்பெண் மட்டுமே முக்கியமாக இருந்தால், ஒட்டுமொத்த நாடும் அவரின் பின்னால் இப்போது நின்றிருக்காது’ என குறிப்பிட்டுள்ளார்.