‘’ போய் வாடா. என் பொலி காட்டு ராசா ‘’ : டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகல், ரசிகர்கள் அதிர்ச்சி !
இந்திய டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.
இந்திய அணி 3-வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது. போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்த கேப்டன் விராட் கோலி கூறுகையில்: உள்ளே என்ன நடந்தது என்று எங்களுக்கு தெரியும்.
ஆனால் வெளியே இருப்பவர்களுக்கு அது பற்றி தெரியாது. ஆகையால் அவர்களது விமர்சனத்திற்கு நான் பதிலளிக்க விருப்பமில்லை.
மேலும் கொடுக்கப்பட்ட முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த தருணத்தில் இருந்து எங்களால் மீண்டு வர முடியவில்லை. இதன் காரணமாக முக்கியமான தருணத்தில் விக்கெட்டுகள் எடுக்க தவறிவிட்டோம். அதுதான் போட்டியை எங்களிடமிருந்து தட்டிச் சென்று விட்டது எனக் கூறினார்.
— Virat Kohli (@imVkohli) January 15, 2022
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-2 என தோல்வி அடைந்தது.இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகுவதாக அறிவித்துள்ளார்.
இந்த முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் .டி20,ஒரு நாள் போட்டி,கேப்டன் பதவியிலிருந்து ஏற்கனவே விராட் கோலி விலகியது குறிப்பிடத்தக்கது ,