சிறந்த பேட்ஸ்மேன் அவர் தான்; அவரது ஆட்டத்தை விரும்பிப் பார்ப்பேன் - பாகிஸ்தான் வீரரை புகழ்ந்த விராட்!
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி பாகிஸ்தான் வீரரை குறித்து பேசியுள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான்
வரும் ஆகஸ்ட் 31ம் தேதி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. இந்த தொடரானது செப்டம்பர் 17ம் தேதி முடிவடையும். இதில் இந்தியா- பாகிஸ்தான் அணியினர் செப்டம்பர் 2ம் நேருக்கு நேர் மோத உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து வரும் அக்டோபர் 5ம் தேதி உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இதில் இந்தியா-பாகிஸ்தான் அணியினர் அக்டோபர் 14ம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பலபரீட்சை நடந்த உள்ளனர்.
இந்நிலையில் உலக கிரிக்கெட்டில் தலை சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான விராட் கோலி பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான பாபர் அசாமை புகழ்ந்துள்ளார்.
விராட் கோலி பேட்டி
அவர் கூறுகையில் ' கடந்த 2019 ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் போதுதான் பாபர் அசாம் உடன் முதன் முதலில் பேசினேன். அந்த சந்திப்பு இமாத் வாசிம் மூலம் தான் நடந்தது. அவரை நான் அண்டர் 19 கிரிக்கெட் விளையாடிய நாட்களிலிருந்தே அறிவேன்.
பாபர் உங்களை சந்திக்க விரும்புகிறார் என்று இமாத் என்னிடம் தெரிவித்தார். மான்செஸ்டர் போட்டிக்கு பிறகு பாபர் அசாம் உடன் பேசினேன். அவர் வெளிக்காட்டும் மரியாதையில் துளியும் இன்று வரை மாறவில்லை.
அவரது ஆட்டத்தை விரும்பிப் பார்ப்பேன். அனைத்து பார்மெட்களிலும் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக அவர் திகழ்கிறார்” என விராட் கோலி, பாபர் அசாமை புகழ்ந்து பேசியுள்ளார்.