விராட் கோலியிடம் பெரிய ஈகோ உள்ளது - முறைக்கும் இங்கிலாந்து பௌலர்..!
இந்திய கிரிக்கெட் அணியின் விராட் கோலியை மிகவும் ஈகோ பிடித்தவர் என இங்கிலாந்து பௌலர் விமர்சித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விராட் கோலி
இந்திய அணியின் முக்கிய கிரிக்கெட் வீரராக இருக்கும் விராட் கோலியை இங்கிலாந்து அணியின் பௌலர் ஒல்லி ராபின்சன் அவர் மிகவும் ஈகோ பிடித்தவர் என்று விமர்சனம் செய்துள்ளார்.
வரும் 25-ஆம் தேதி துவங்கி இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் டெஸ்ட் தொடர் நடைப்பெறவுள்ளது. ஹைதராபாத்தில் துவங்கும் முதல் போட்டிக்காக இன்று முதல் இந்தியா மனற்றும் இங்கிலாந்து அணி வீரர்கள் மிக தீவிரமாக பயிற்சி மேற்கொள்ளவுள்ளனர்.
ஈகோ
இந்த போட்டிக்கு முன்பாக பேசிய இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர் ஒல்லி ராபின்சன், "எப்போதும் சிறந்த வீரர்களுக்கு எதிராக விளையாட அனைவரும் விரும்புவார்கள் என்று குறிப்பிட்டு, விராட் கோலி அது போன்ற சிறப்பான வீரர் என்று புகழாரம் சூட்டி, அவர் அதிக ஈகோ கொண்டுள்ளார் என்றார்.
இந்தியாவில் எதிரணி பவுலர்களுக்கு எதிராக அதிரடியாக ரன்கள் குவிக்கலாம் என்று விராட் நினைப்பார் என்றார் ராபின்சன், இதற்கு முந்தைய தொடர்களிலும் நாங்கள் மோதியுள்ளோம் என்றும் இம்முறையும் அவரை எதிர்கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று கூறினார்.