தொடர்ந்து டக்-அவுட் - மனமுடைந்த கோலி ரசிகர்களை நிமிர்ந்து கூட பார்க்காமல் தலை குனிந்தபடியே வெளியேறும் வீடியோ
ஐ.பி.எல் சீசன் 15-வது தொட்ருக்கான போட்டிகள் கடந்த மார்ச் 26-ந் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற 36-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.
மும்பை ப்ராபோன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தொடர்ந்து இரண்டு முறை டக் அவுட்டாகி இருந்தார்.
— Diving Slip (@SlipDiving) April 23, 2022
இரண்டு முறை விராட் கோலி டக் அவுட் ஆகியது ஐபிஎல் சீசனில் இதுதான் முதல்முறை.
தொடர்ந்து டக் அவுட்டாக்கியதால் என்ன செய்வது என்று தெரியாமல் தலையை குனிந்தவாறே விராட் கோலி மைதானத்தை விட்டு வெளியே நடந்து செல்லும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.